Skip to main content

திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று அவசியம் என அறிவிக்கக்கோரி வழக்கு

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
mariage

 

திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று அவசியம் என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் 2009 ம் ஆண்டு திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை.  இதனால், திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  

 

இந்த வழக்கு  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று  விசாரணைக்கு வந்த போது " திருமண பதிவுச் சட்டம் இருந்த போதும், பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கூறப்பட வில்லை. அதனால், அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். மணமக்களின் ஆரோக்கியத்தை பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும். இதுபற்றி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லையென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதையடுத்து, இம்மனு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   

சார்ந்த செய்திகள்