Skip to main content

இந்து தெய்வங்களை புண்படுத்தியதாக கிறிஸ்துவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு!!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
CASE

 

இந்து தெய்வங்களையும், இந்து மத ஆலய வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிருஸ்துவ மதபோதகர் மோகன் சி  லாசரஸ் மீது கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பிரபல கிருஸ்துவ போதகர் மோகன் சி லாசரஸ் இந்து தெய்வங்களை பற்றியும் வழிபாட்டு முறைகள் பற்றியும் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்து கோவில்கள் சாத்தான்களின் இருப்பிடம் எனவும், தான் காஞ்சி சங்கரமடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து அங்கே சென்றபோது அங்கு யாகத்தில் பட்டு சேலைகலள், பட்டு வேட்டிகள் தீயிலிட்டு யாகம் செய்தனர் எனவும் இந்து மத வழிபாடுகளை பற்றி சர்ச்சைக்குரிய வகையிலும் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும் பேசியதாக கோவையில் பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, சூலூர் காவல் நிலையங்களில் பாஜக பிரமுகர் முருகேஷ் அளித்துள்ள புகாரில் லாசரஸ் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்