பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பெரியாரை தவறாக பேசிவிட்டு பெரியார் பிறந்த மண்ணில் ஓட்டு கேட்டால் அமைதியாக இருப்பார்களா? நம்மூரில் திருச்சியை சார்ந்த ஒரு தலைவரை குற்றம் சொல்லிவிட்டு திருச்சியில் இலகுவாக பிரச்சாரம் செய்து விட்டு வந்துவிட முடியுமா? அந்த மண்ணின் மைந்தர்கள் கேட்கத்தானே செய்வார்கள். பதில் சொல்லுங்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் இன்னும் 13 அமாவாசை தான் இருக்கிறது திமுக ஆட்சி கலந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, 'அமாவாசைகளுக்கெல்லாம் அமாவாசை தான் பதில் சொல்ல வேண்டும். என்னை கேட்டால் எப்படி?' என பதிலளித்தார்.