'ரசிகர்களுக்கே 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்கும் நடிகர்கள் நாட்டை பாதுகாக்க முடியுமா?' என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார்.
சென்னை மாங்காட்டில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''நடிகர்கள் எல்லாம் ஒரு படத்திற்கு 200 கோடி, 250 கோடி வாங்குறாங்க. உங்களுடைய ரசிகர்கள் எல்லாம் உங்கள் மீது பிரியமாக தானே இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகும் பொழுது ஃப்ரீயா டிக்கெட்டை கொடுக்கலாமல்லவா? ஒரு டிக்கெட் 2000 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். உண்டா இல்லையா?
அவருடைய ரசிகர்களுக்கே 2000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா? போன வருஷம் மட்டும் தான் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பண பரிசு கொடுத்திருந்தார்கள். கட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் அதை செய்கிறார்கள். அதனால் ஒரு வருடத்திற்கு இந்த மாதிரி செய்துள்ளார்கள். இதெல்லாம் ஜனங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல'' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசினார்.