Skip to main content

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக துறை வாரியாக கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. முக்கிய துறைகளில் சில அறிவிப்புகளை வெளியிட அதிகாரிகள் எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்திருந்தனர்.

 

tamilnadu ministers

 

அதன்படி முக்கிய அறிவிப்புகளை வெளியிட தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக அமைச்சரவையில் ஒப்புதல் பெற தமிழக அமைச்சரவைக் கூட்டப்படுகிறது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து, சில அரசியல் ரீதியான சில முக்கிய முடிவுகளையும் எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும், குறிப்பாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது, நிறுத்தி வைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சார்ந்த செய்திகள்