
கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் வசித்து வருகிறார். சொந்தமாக ஜூவல்லரி தொழில் செய்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வருகிறார். மேலும் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் சுரேஷ் வீட்டில் உள்ள தனது அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் விசாரணை நடத்திவருகின்றனர்.