Published on 02/12/2020 | Edited on 02/12/2020
'வங்கக்கடலில் உருவான 'புரெவி' புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் 'புரெவி' புயல் மையம் கொண்டுள்ளது. ஆறு மணி நேரத்தில் 'புரெவி' புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை (அல்லது) இரவில் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது 'புரெவி' புயல். 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையைக் கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கரையைக் கடந்த பின் 'புரெவி' புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. நாளை மறுநாள் அதிகாலை,1 கன்னியாகுமரி- பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும்.' இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'புரெவி' புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தூரல் மழை பெய்கிறது.