Skip to main content

கருப்பு பூஞ்சை தொற்று - அரசு வழிகாட்டுதல் வெளியீடு!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

Black Fungal Infections - Government Guide Release!

 

கருப்பு பூஞ்சைத் தொற்றைக் கண்டறிதல், சிகிச்சை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, "முகத்திலும் கண் கீழ்ப்பகுதியிலும் வீக்கம், மூக்கடைப்பு, ஈறுகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. பாதித்தோருக்கு மூக்கு, கண் பகுதியில் CT- PNS ஸ்கேன் (அல்லது) முகம் முழுவதும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். கருப்பு பூஞ்சைத் தொற்று எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருப்பு பூஞ்சைத் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்