
தமிழகத்தை கலவர பூமியாக்கி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில்,
பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் உள்ளார்ந்த நோக்கம், இந்த பூமியை காலவரமாக்க வேண்டும். மக்களை சீண்டி அதன் மூலம் வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இதை செய்கிறது. ஆனால் இதை இந்த அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சிலைகளுக்கெல்லாம் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்று கூறிய அரசின் பாதுக்காப்பு இது தானா? இது மக்களை சீண்டி பார்க்கும் நிகழ்வு இதற்கு கண்டிப்பாக மக்கள் பதில் சொல்வார்கள்.