Published on 14/01/2020 | Edited on 14/01/2020
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போகிப்பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதல், புதியன புகுதல் என்பதை அடிப்படையாக கொண்டு போகிப்பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
![bhogi festival chennai air pollution high](http://image.nakkheeran.in/cdn/farfuture/DFNLCGHPaTXibb25tWyLy63gi9A0QRUbk5q02L9qw2E/1578967993/sites/default/files/inline-images/boghi3.jpg)
பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் புகை மூட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிகாலை 05.00 மணி நிலவரப்படி காற்று மாசின் அளவு மணலியில் 795, அமெரிக்க தூதரகம் அருகே 272, ஆலந்தூரில் 161 ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசின் அளவு அதிகபட்சமாக 100 வரை இருக்கலாம் என்ற நிலையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.