
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை அடிவார பகுதியில் பேட்டையராயன் பேட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி தமிழக - ஆந்திரா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இத்தகைய சூழலில் தான் ஆந்திர மாநிலத்தில் இருந்து யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தமிழக எல்லை பகுதியில் ஊடுருவி வருகின்றன. இருப்பினும் வனத்துறையினர் மீண்டும் ஆந்திரா காட்டுப் பகுதியில் விட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில பகுதியில் இருந்து 2 பெரிய கரடி மற்றும் 4 குட்டி கரடியானது. இன்று காலை இந்த பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு வயல்வெளியில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த மாலதி என்ற பெண்ணை கண்ட கரடி ஒன்று அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கை மற்றும் வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இதனைத் தடுக்கச் சென்ற ராஜி என்ற முதியவரையும் கரடியானது தாக்கியுள்ளது. இதனால் இருவரும் இரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளனர். மேலும் வலியால் அவர்கள் இருவரும் கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்டு அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அதோடு இருவரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணாமாக பொதுமக்கள் வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர்கள் வந்து வீட்டை தாழிட்டு கொண்டு உள்ளே இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த கரடியானது மாலினி என்பவருடைய வீட்டிற்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு முகாமிட்டு கரடியைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், வலை வைத்து பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திர வனப்பகுதியில் கரடியைத் திறந்து விட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.