Published on 02/12/2019 | Edited on 02/12/2019
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை, மேட்டூர் அணை, பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
![bavani saker dam water level raised union water management instruction](http://image.nakkheeran.in/cdn/farfuture/mTbB-MDyAY7PlXyZ6duD39XPSCIOyK0WNXLIfM4gAkI/1575271778/sites/default/files/inline-images/bhvani.jpg)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11,200 கனஅடியில் இருந்து 21,650 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அணையில் இருந்து 20,350 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.