Published on 18/02/2018 | Edited on 18/02/2018

மதுரை ஆதினமாக இருந்து கொண்டு ஆதினமரபுகளை மீறி செயல்படும் அருணகிரிநாதர் மடத்தை விட்டு வெளியேற வேண்டும். இந்து ஆலயங்களை பாதுகாக்க தவறிய அறநிலைத் துறையை வெறியேற்றி துறவிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட கோவில் நிர்வாகத்தினர் அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூட நம்பிக்கை என்ற பெயரில் இந்து கடவுளையும் சக மதத்தையும் இழிவாக திரைப்படம் எடுப்பவர் பேசுபவர் எழுதுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைத்திட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க மதமாற்றம், பசுவதை, பொடா, தடா, பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கையை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சாலையில் இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நடந்தது.
-ஷாகுல்