Published on 03/07/2018 | Edited on 03/07/2018
![pi](http://image.nakkheeran.in/cdn/farfuture/pCXiSeK43Q9SOTdoIrVOBmM6OASd8Rri-L5jwvfKHek/1533347670/sites/default/files/inline-images/pidi.jpg)
அரியலூர் டி.எஸ்.பி க்கு கருர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் கடந்த 2011ல் ஆய்வாளராக இருந்தவர் மோகன்தாஸ் . இவர் தற்போது அரியலூரில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
புலியூரை சேர்ந்த காளிமுத்து என்பவர் கடந்த 2011ல் நடந்து செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்து தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக 5 முறை வாய்தா அனுப்பியும் சாட்சியம் அளிக்க டிஎஸ்பி மோகன்தாஸ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜாகவில்லை.
இதனால் டி.எஸ்.பி மோகன்தாஸ்க்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனவள்ளி பிடிவாரண்ட் பிறப்பித்து இம்மாதம் ஜூலை 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.