bribe

Advertisment

ஊழல் புகாருக்குள்ளான சுற்றுச்சூழல்அதிகாரி பாண்டியனை, தமிழக அரசு பணியிடை நீக்கம்செய்துள்ளது. பணியிடை நீக்கம்செய்யப்பட்ட பாண்டியனின்வங்கி லாக்கரைதிறந்து சோதனையிடவும் லஞ்சஒழிப்புபோலீசார்நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் புகாரில்சிக்கியசுற்றுச்சூழல்அதிகாரி பாண்டியனின்வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைமேற்கொண்டதில், (இரண்டு கணக்குகளில்) கணக்கில் வராத1 கோடியே 37 லட்சம் ரூபாயைதமிழகலஞ்சஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.அதேபோல், 3கிலோவெள்ளிப்பொருட்கள், 10 கோடிக்காண சொத்துஆவணங்களும் சிக்கின. பாண்டியனிடம் இருந்து அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முறைகேடாக லஞ்சம் பெற்று அவர் சொத்துசேர்த்ததாக எழுந்தபுகாரின்பேரில் அவரிடம்விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அவரை தமிழக அரசு, பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், பாண்டியனின்வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்சஒழிப்பு துறையினர், பாண்டியன்கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.