Published on 27/03/2020 | Edited on 27/03/2020
கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தங்களது தொகுதியில் சுகாதார பணிகள் மேற்க்கெள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதிகளை ஒதுக்கி வருகின்றனர். அந்த வரிசையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்ச ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 30 லட்சமும், வேலூர் மாவட்டத்துக்கு 20 லட்சம் என 50 ஒதுக்கியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார்.