Skip to main content

டோலியில் சுமந்து வரப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published on 17/07/2019 | Edited on 17/07/2019


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கும்மர வொன்ச்சி  என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் இங்குள்ளவர்கள் மலையடிவாரத்தில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

 

d

 

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கும்மரவொன்ச்சி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை டோலி கட்டி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதிகளை கடந்தும், மழை காரணமாக நிரம்பியுள்ள குளம், குட்டைகளில் இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச்சென்று மலையடிவாரத்தை அடைந்தனர். 

 

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாடேறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சார்ந்த செய்திகள்