draja

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

Advertisment

ரபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்து வருகிறார்.

Advertisment

இந்தநிலையில்சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சுதந்திரத்துக்கு போராடாத ஆர்.எஸ்.எஸ்.க்கு தேச பக்தியை பெற்றி பேச உரிமை இல்லை. நரேந்திர மோடி அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் தேச துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். ரபேல் போல் விமான முறைகேடு குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.ரபேல் போர் விமான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது என்றார்.