Skip to main content

மீண்டும் கொடுமுடியில் 2 ரயில்கள் நின்று செல்ல அனுமதி

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

nn

 

மீண்டும் கொடுமுடியில் 2 ரயில்கள் நின்று செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் கே.என்.பாட்ஷா தெற்கு ரயில்வேக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மனு அனுப்பினார். அதில் கொரோனா காலத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நின்று சென்ற 4 ரயில்கள் தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கொடுமுடியில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பிரச்சனையிலிருந்து மீண்டுவந்தபிறகும் கொடுமுடி நிலையத்தில் நின்று செல்லவில்லை. எனவே அந்த ரயில்கள் மீண்டும் கொடுமுடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இதையடுத்து கொடுமுடி ரயில் நிலையத்தில் மீண்டும் வண்டி எண் 16188 எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் கே.என்.பாட்ஷா ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் படிப்படியாக அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்