Published on 22/06/2021 | Edited on 22/06/2021
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக இரண்டு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களில் முகாமிட்டு தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜனை அனுப்பிவருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து இருந்து 4 கண்டெய்னர்களில் 76.06 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் இன்று (22.06.2021) மாலை திருச்சிராப்பள்ளி வந்தடைந்தது. திருச்சி வந்த மருத்துவ ஆக்சிஜன், கண்டெய்னர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 5,896.35 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.