




Published on 26/01/2023 | Edited on 26/01/2023
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. குடியரசு தின விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.