சிதம்பரம் நகரம் 4- வது வார்டு நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பாலு, புவனேஸ்வரி தம்பதியினரின் மகன் கவியரசன்(6) இவர் அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி ஒரு வருடத்திற்கு மேல் திறக்கபடாமல் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்காக அமைக்கப்பட்ட கழிவு நீர் தொட்டியை மூடி வைக்காமல் திறந்தே கிடந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்களுடன் இணைந்து கழிவுநீர் தொட்டியுள்ள பகுதியில் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாரத நேரத்தில் சிறுவன் கவியரசன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து விட்டான். விழுந்த சிறிது நேரத்திலே மூச்சு தினறி உயிர் இழந்துள்ளான். தகவல் அறிந்து பக்கத்தில் உள்ளவர்கள் அவனது உடலை தூக்கியபோது இறந்தேயுள்ளான். மாணவணின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் அழுவதை பார்க்கும் போது கல்நெஞ்சையும் கரையவைப்பது போல் இருந்தது. அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பை சரியான நேரத்தில் பயணாளிகளுக்கு (தொழிலாளர்கள்) வழங்கவில்லை. மேலும் கழிவுநீர்( செப்டிக்டேங்) மூடியே இல்லாமல் இருந்துள்ளது. பணி முடிந்த கட்டிடத்திற்கு காவலாளி இல்லை. எனவே இது அரசின் மெத்தனபோக்கே காரணம் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.