Published on 31/07/2019 | Edited on 31/07/2019
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52 சதவிகிதம் இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்களின் படி மொத்தம் இருந்த 1,72,490 இடங்களில் 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன அதாவது 48 சதவிகிதாம்தான் நிரப்பியுள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 76,364 இடங்களும், துணை கலந்தாய்வு மூலம் 4,548 இடங்களும் நிரப்பப்பட்டது. மேலும் சிறப்புகலந்தாய்வில் 1,683 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.