Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர்,  நாகை மற்றும்  புதுச்சேரி,  காரைக்கால் ஆகிய கடலோரம் மற்றும் டெல்டா பகுதிககளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

v


இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கடலூரில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முத்தரசன், " மத்திய அரசாங்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்புதலை  ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.  இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 


கூடத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த  மத்திய குழு உறுப்பினர் வாசுகி,  " கடலூர் மாவட்டத்தை பெட்ரோல் மற்றும் ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் முயற்சினை கைவிட வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, குமாரட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எற்படும் விளைவுகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக வருகின்ற 7,8 ஆம் தேதிகளில் இரு சக்கர வாகன பிரச்சார பயனத்தை மார்க்கிஸ்ட் கட்சி மேற்கொள்ள இருக்கிறது" என்றார்.  

 

v


மேலும் அவர்,  "குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், வங்கியில் விவசாயிகள் பெயரில் 300 கோடி மோசடி செய்த கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகம், அதற்கான முழு பொருப்பையும் ஏற்றுகொண்டு, விவசாயிகளுக்கு எவ்வித தொந்தரவும் வங்கியில் இருந்து வராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தலையீட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும், தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம், ஒவ்வொரு மண்டலத்திலும் தனியார் வாகனங்களில்  அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்டவைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு தடுக்க வேண்டும், நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் உடைய மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும், என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும், கருவேப்பிலங்குறிச்சியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி வழக்கினை சிபிசிஐடி விசாரனைக்கு மாற்ற வேண்டும், மத்திய அரசு மும்மொழி கொள்கையை திணிப்பது இரு மொழி கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதித்து போராடுவோம்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்