Skip to main content

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி- மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு விழிப்புணர்வு! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 'செஸ் ஒலிம்பியாட் 44' விளையாட்டுப் போட்டி மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டில் நடப்பதால் விளையாட்டுத் துறை மட்டுமின்றி பல்துறைகள் சார்பிலும் மக்களைக் கவரும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்களில் 'செஸ் ஒலிம்பியாட் 44' விழிபபுணர்வு விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. மக்களிடமும் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதேபோல கலை நிகழ்ச்சிகள் மூலமும் மக்களை கவர்ந்து வருகிறது செஸ் ஒலிம்பியாட் 44.

 

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (17/07/2022) சித்தன்னவாசல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்த நிலையில், மாலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பங்கிற்கு ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தி மேலும் மக்களை கவர்ந்துள்ளனர். 

 

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதியிலும் செஸ் ஒலிம்பியாட் 44 பேசப்பட வேண்டும் என்பதால் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

சார்ந்த செய்திகள்