Skip to main content

நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது விபத்து; 4 பேர் காயம்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

4 injured in Cuddalore accident

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் ரெங்கநாதன். இவருக்கு சொந்தமான முந்திரி காட்டின் அருகே வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளது. அந்த காட்டில் வன விலங்குகளான காட்டுப்பன்றி, மான் மற்றும் காட்டு முயல்கள் அதிகளவில் உள்ளன.

 

இந்நிலையில் காட்டுப்பன்றியின் கறிக்கு ஆசைப்பட்டு அக்கிராமத்தை சேர்ந்த ஆறுமுகனின் மகன் ரங்கநாதன் (52), உக்கிரவேல் மகன் மதுரபாண்டி (26), காசி மகன் இளைய குமார் மற்றும் ஏழுமலையின் என்பவரின் மகனான 13 வயது சிறுவன் ஆகிய நால்வரும் ரங்கநாதனுக்கு சொந்தமான முந்திரி காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வெடிமருந்து, கூழாங்கற்கள், ஆணி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் நான்கு நபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

 

பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சிறுவன் உட்பட நான்கு நபர்களும் உடலில் பலத்த தீக்காயங்களுடன் துடிப்பதை கண்டு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து ஆலடி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் முந்திரிக்காடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித நாட்டு வெடிகுண்டுகளும் கிடைக்காததால் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

 

மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது வெடி மருந்து இருந்த பேப்பர்கள், கூழாங்கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இச்சம்பவத்தில் ரங்கநாதனின் கால் துண்டாகி சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு கிடந்ததையும் காவல்துறையினர் கைப்பற்றினர். காட்டுப்பன்றியின் கறிக்கு ஆசைப்பட்டு அதை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட நான்கு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.