Published on 16/10/2018 | Edited on 16/10/2018
குட்கா விவகாரம் தொடர்பாக குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் பங்குதாரர்கள் இருவர், உணவு பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் கைதான உணவுத்துறை அதிகாரி செந்தில் முருகனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இன்று நடந்த விசாரணையில் குட்கா விற்பனைக்காக அதிகாரி செந்தில்முருகன் மாதம் 2.30 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிபிஐ தரப்பு வாதிட்டது. இந்த கடுமையான குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கும் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.