Published on 25/10/2018 | Edited on 25/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு குறித்து கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
இந்த தீர்ப்பில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.நீதிமன்றம் இதற்கு முன்பே இந்த வழக்கிற்கு தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தீர்ப்பு தீர்ப்புதான் அதை எல்லாரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் எனக்கூறினார்.