Skip to main content

தமிழகத்தில் 15 நாள் முழு ஊரடங்கு அமல்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

CORONAVIRUS PREVENTION COMPLETE LOCKDOWN TN GOVT IMPOSED

 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

 

அதேபோல், மேலும் சில கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. அவை பின்வருமாறு: அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும்; இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படாது; மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, டீக்கடைகள் ஆகியவை மதியம் 12.00 மணிவரை செயல்படும்; மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்; காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் நண்பகல் 12.00 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது; இரண்டு வாரங்களுக்கு ரேஷன் கடைகள் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்படும்; இரண்டு வாரங்களுக்கு தங்கும் விடுதிகள் (HOTELS AND LODGES) செயல்பட அனுமதி இல்லை; பூச்சிக்கொல்லி, விதை, உரம், மாட்டுத்தீவனம் விற்கும் கடைகள் நண்பகல் 12.00 மணிவரை இயங்கலாம்; அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, உட்கார்ந்து உணவருந்த அனுமதி இல்லை; தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதியில்லை; மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை ஓடாது; திருமணம், இறப்பு நிகழ்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனை ஆகியவற்றுக்குச் செல்ல உரிய ஆவணங்களுடன் அனுமதிக்கப்படுவர்; விமானம், ரயில்களில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ- பாஸ் முறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்