Skip to main content

நவ.23, 24-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

tamilnadu heavy rains regional meteorological centre

 

 

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. 

 

நவம்பர் 23- ஆம் தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

நவம்பர் 24- ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வைப்பாறு (தூத்துக்குடி)- 10 செ.மீ., சிவகாசி (விருதுநகர்), மதுரை தலா- 4 செ.மீ., சூரங்குடி (தூத்துக்குடி), அரியலூர் தலா- 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

 

தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்