Skip to main content

வேலுார் - வேட்பு மனுத் தாக்கல் இன்று துவங்குகிறது

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி தேதி ஜூலை 18. அதற்கு அடுத்த நாள் 19ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 22ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 


  Vellore



திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

கடந்த முறை அ.ம.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை, வேலுார் தொகுதியில், அ.ம.மு.க. போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்திருக்கிறார். 
 

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. 



 

 

சார்ந்த செய்திகள்