Skip to main content

மல்லுக் கட்டிய அமைச்சர் வளர்மதி –விட்டு கொடுத்த மாவட்ட செயலாளர்கள்!

Published on 19/09/2019 | Edited on 13/12/2019

கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரத்தில் அதிமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர் வளர்மதிக்கும் இடையே யுத்தமே நடந்து. உட்கட்சி பிரச்சனையில் தேர்தல் வரை சென்று மாவட்ட செயலாளர் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு சென்றதால் கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

natarajan

 

திருச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. அதில், அமைச்சர் வளர்மதி தலையிட்டு தனது ஆதரவாளர்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்துமாறு கூட்டுறவு சங்க அதிகாரிகளை வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மாவட்டச்செயலாளர் பரிந்துரைத்த நபர்களை அவர் ஏற்க மறுத்ததாகவும் பிரச்சனை செய்திருக்கிறார்.
திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாக குழுவிற்கு மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அமைச்சர்களுக்கு 4 என்றும் எம்.எல்.ஏக்களுக்கு இரண்டு என்கிற விகித அடிப்படையில் பிரித்து கொண்டிருக்கிறார்கள்.
 

இந்த பங்கீட்டில் அமைச்சர் வெல்லமண்டி நடராசன் , மற்றும் மாநகர மாவட்ட செயலாளர் குமார், மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால்  அமைச்சர் வளர்மதி  எனக்கு புறநகரில் 4 வேண்டும் மற்றும்  மாநகரில் 4 வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, அதுவும்  தன்னுடைய ஆட்களுக்கு வேண்டும் என்று தேர்தலை நடத்த சொல்லியிருக்கிறார்.


அதில் 18 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 4 உறுப்பினர்களை தேர்வு செய்வதில் மட்டும் கடும் போட்டி ஏற்பட்டது. அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலும், மாநகர் மாவட்டச்செயலாளர் குமாரும் ஒன்றியச்செயலாளர்கள் 4 பேரை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தனர். கூட்டுறவு சங்க அதிகாரிகளும் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களே சொன்னதால் எந்த சிக்கலும் ஏற்படாது என நினைத்த நிலையில், அமைச்சர் வளர்மதி "என் ஆட்களுக்கு கட்டாயம் வாய்ப்பு வேண்டும். நான் அமைச்சர் எனக்கு கொடுக்கலேன்னா அவ்வளவு தான் என்று தேர்தலை நடத்துங்க பாதுக்கலாம்" என்று சொல்ல அதிகாரிகள் அனைவரும் குழம்பி போனார்கள்.
 

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனையில் எதிர்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் தான் பிரச்சனை வரும். ஆனால் தற்போது ஆளும்கட்சிக்குள் அமைச்சருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே பிரச்சனை என்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்து மாவட்ட செயலாளர்கள் இருவரும் தாங்கள் நிறுத்திய வேட்பாளர்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். ஆளும் தரப்பில் மாவட்ட செயலாளர்களை மீறி அமைச்சர் பிடிவாதம் பண்ணி பொறுப்பை வாங்கியது கட்சியினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்