Skip to main content

"மக்கள் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

UNION HOME MINISTER AMIT SHAH ELECTION CAMPAIGN AT NELLAI DISTRICT


தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (04/04/2021) இரவுடன் நிறைவடையும் உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

UNION HOME MINISTER AMIT SHAH ELECTION CAMPAIGN AT NELLAI DISTRICT

 

அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (03/04/2021) சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம், தச்சநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 

UNION HOME MINISTER AMIT SHAH ELECTION CAMPAIGN AT NELLAI DISTRICT

 

அப்போது அவர் கூறியதாவது, "பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. பிரதமர் விவசாயிகள், மீனவர்களைப் பற்றி கவலைப்படுகிறார்; ஸ்டாலின் தனது மகன் குறித்து கவலைப்படுகிறார். உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. தமிழகத்தின் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றி வருகிறார் பிரதமர். அதிமுக - பாஜக தமிழகத்திற்காகப் பாடுபடுகிறது; திமுக - காங்கிரஸ் குடும்பத்திற்காகப் பாடுபடுகிறது. உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திமுக முயற்சித்து வருகிறது. இது மக்கள் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். 10 ஆண்டுகளாக சாமானியரின் ஆட்சி நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்துவிடுவார்கள்" என்று குற்றம் சாட்டினார். 

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

11 புதுமுகங்கள் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 DMK released the list of 11 newcomers- candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வாசித்தார். அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை-கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ.மணி, ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ.ராசா, வேலூர் - கதிர் ஆனந்த்,கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண்நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 50 சதவீதத்திற்கும் மேல் 11 புதிய முகங்கள் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தர்மபுரி - ஆ.மணி, ஆரணி -தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதுமுக வேட்பாளர்கள் ஆவர்.

தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜி.செல்வம், ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை, கதிர் ஆனந்த் ஆகியோர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . தூத்துக்குடியில் கனிமொழி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசியில் ராணி ஸ்ரீ குமார் என மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட தொண்டர்கள், ஒன்றிய செயலாளர்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைவர்கள், இரண்டு மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், ஆறு வழக்கறிஞர்கள்  திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.