மகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு என்கின்றனர். மஹாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக தள்ளப்பட்டது. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு கட்சி தாவ ஒரு சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில மாநிலங்களவை உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆட்சிக்கு வர முடியாத சூழலால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் புனேவில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் தொடர்பாக காவல்துறை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புனே வந்தடைந்தார். புனே விமான நிலையத்தில் அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். மேலும் பாஜகவுடன் கூட்டணி முடிந்த பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்தார். இதனால் இவர்களுடைய சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை வரவேற்ற பிறகு உத்தவ் தாக்கரே உடனடியாக மும்பை திரும்பி விட்டார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.