Skip to main content

விருகம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்...! (படங்கள்)    

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 


சென்னை, விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் சட்டமன்ற அலுவலகத்தை நேற்று மாலை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

 

விழாவில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஏற்பாடு செய்திருந்த, 'நம்ம விருகம்பாக்கம்' என்ற செயலியையும் 24 மணி நேரமும் செயல்பட கூடிய அவசர அழைப்பு எண்ணையும் வெளியிட்டப்பட்டது. பின்னர், விருகம்பாக்கம் தொகுதியில் கரோனாவால் தொழில் பாதிக்கப்பட்ட 2,500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்