நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலுள்ள மதிமுகவிற்கு இன்று தொகுதிப்பங்கீடு இறுதிசெய்து ஒப்பந்தம் கையெழுத்தாகுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

dmk mdmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் இன்று காலை விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முறையான அறிவிப்பை திமுக தலைமையும், அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்டனர். அதேபோல் மதிமுகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டு இன்று மதியம் அறிவிப்பதாக இருந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்தார். அலுவலகத்திற்கு சென்ற வைகோ சிறிது நேரத்திலேயே வெளியேவந்து, இன்று மதியம்தான் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி திமுகவிடமிருந்து அழைப்பு வந்தது. எங்கள் கட்சியின் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் வெளியூரிலுள்ளதால் நாளை அவர்கள்வருவார்கள். அதன்பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்று, நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார்.

இந்தப் பின்னணியில்... கூட்டணி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படாததற்கு காரணம் தொகுதிகள்தான் என மதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூறுகிறார்கள். திமுக அணியில் மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் என இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது,உண்மைதான். ஆனால் மதிமுக கேட்ட தொகுதிகள் திருச்சி மற்றும் ஈரோடு. திமுக தரப்பில், திமுகவின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் திமுகதான் போட்டியிட வேண்டுமென உறுதியாக கூறியிருக்கிறார். அதேபோல் ஈரோடு தொகுதி காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமையிடம் அனுமதிபெற்று அதை திமுக தலைமையிடமும் கூறியிருக்கிறார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆக மதிமுக எதிர்பார்த்த திருச்சி மற்றும் ஈரோடு இந்த இரண்டு தொகுதிகளையும் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட முடியாத சூழல் திமுகவிற்கு உள்ளது. ஆகவே மீதி இரண்டு தொகுதிகளை ஒதுக்குகிறோம் என திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் சற்று மனம் தளர்ந்த வைகோ நாளை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டு நேரில் வந்து தொகுதிகளை முடிவு செய்வோம் எனக்கூறிவிட்டு வந்துள்ளார். மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் என்பதில் பிரச்சனை இல்லை, அது எந்த தொகுதிகள் என்பதுதான் சிக்கலாக உள்ளது. நாளை மாலை எந்தத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும் என்கிறார்கள் மதிமுகவினர்.