Skip to main content

பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பட்டியல்! -வருத்தத்தில் சசிகலா புஷ்பா!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

sasikala pushpa

 

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.-வுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார் சசிகலா புஷ்பா. மாநிலங்களவை பதவி முடிந்தவுடன் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் டெல்லியில் பா.ஜ.க.-வில் இணைந்தார். 

 

தமிழக பா.ஜ.க.-வுக்கு தலைவர் நியமிக்கப்படாத அந்த நேரத்தில், அந்தப் பதவிக்கு சசிகலா புஷ்பாவும் முயற்சி எடுத்து வந்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனத்தின்போது, முக்கியமான பதவி தரப்படும் என்று பா.ஜ.க. தரப்பு சசிகலா புஷ்பாவுக்கு உறுதிமொழி கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து நாடார் மற்றும் சில சமூகத்தைச் சேர்ந்த மகளிரணியினரைத் தங்கள் கட்சிக்குக் கொண்டுவரும் அசைன்மெண்ட்டை சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க. கொடுத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் உற்சாகமாவே இருந்தார் சசிகலா புஷ்பா.

 

இந்தநிலையில் மாநிலத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதையடுத்து, தனக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்கவில்லையென்றாலும், மாநிலத் துணைத் தலைவர் பதவி, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பதவிகளில் ஒன்று கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். 

 

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று அவர் சென்னையில் உள்ள பா.ஜ.க. மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார் சசிகலா புஷ்பா. இதேபோல் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் பலருக்கும் இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக டெல்லிக்கு புகார் தெரிவிக்க இருக்கிறாராம் பொன்னார். 

 

 

 

சார்ந்த செய்திகள்