Published on 23/05/2019 | Edited on 23/05/2019
![dmk candidate kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/ISFbvBE3E1UJcQYSsICJ-679wPH13ytnEmkqHdlYVvg/1558627523/sites/default/files/inline-images/dmk%2021_0.jpg)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. சார்பில் கனிமொழி, அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிட்டனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கனிமொழிக்கு திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் ஜோயல் உள்பட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.