
திமுக தலைவர் மகள் கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்த விமர்சனத்திற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் எச்.ராஜாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்தும், காலணியால் அடித்தும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன், எச்.ராஜாவை கண்டித்து எச்சில் துப்பும் போராட்டத்தை இன்று நடத்தினார். சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சுடுகாடு அருகே குப்பைத்தொட்டியில் ராஜா படத்தை ஒட்டி எச்சில் துப்பும் போராட்டத்தை நடத்தினார்.
இந்த போராட்டத்தின்போது, எச். ராஜா முகத்தில் சாணி அடித்தும், துடைப்பத்தால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் போராட்டக்காரர்கள்.





