Skip to main content

திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும்... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 
 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் என்று தெரிவிக்கின்றன. 


 

 

mks-eps



டுடே சாணக்கியா அமைப்பு, நியூஸ் 24 உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 31ல் இருந்து 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 6 அல்லது 7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. 
 

இந்தியா டுடே - ஏக்சிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 34ல் இருந்து 38 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. 
 

ரிபப்ளிக் சி ஓட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 27 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 11 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


 

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில், அதிமுக கூட்டணி 9 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. 
 

சி.என்.என். நியூஸ் 18 கருத்துகணிப்பில் திமுக கூட்டணி 22ல் இருந்து 24 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 14 தொகுதிகளில் இருந்து 16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. 


தந்தி டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 19 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.



 

சார்ந்த செய்திகள்