Skip to main content

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.இந்த நிலையில் திமுக கட்சி சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மக்களின் கோரிக்கையும் கேட்டு வருகிறார்.இந்த நிலையில் கரூர் நாடாளுமன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்க்கு அப்பகுதி மக்களுக்கு திமுக சார்பாக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

 

dmk



அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது, நங்காஞ்சி ஆற்றின் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எந்த கிராமத்திலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மக்கள் குறைகளை கூறியிருக்கிறீர்கள். நிச்சயம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதில் நாம் தான் வெற்றி பெறுவோம். 


நம் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் குடிநீர், கழிவுநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார்கள். விரைவில் ஆட்சி மாற்றமும் வரப்போகிறது. நீங்கள் நினைக்கும் அனைத்து நலத்திட்டங்களும் உங்களுக்கு வந்து சேரும் என்றார். இந்த நன்றி அறிவுப்பு கூட்டத்தில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியும்,கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் உடனிருந்தனர. மேலும் கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

சார்ந்த செய்திகள்