Skip to main content

இதுக்காக எடப்பாடியிடம் பேசனுமா? தமிழக காங்கிரஸ் தலைவர் மீது அதிருப்தியில் சீனியர்கள்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

congress


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரோட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் தரப்புக்கு முதலில் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, கரோனாவைக் காரணம் காட்டி அன்று காலை 7 மணிவரை, அனுமதி தராமல் போலீஸ் இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளனர். அதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ். அழகிரி, நேரடியாக முதல்வர் எடப்பாடியையே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேச, அடுத்த அரைமணி நேரத்தில் அனுமதி கிடைத்திருக்கிறது.
 


இதைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரியும் எம்.பி.க்களான டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், வசந்தகுமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இப்போது கட்சி சீனியர்களோ, அழகிரி ஏன் இதற்காக எடப்பாடியிடம் பேசவேண்டும்? போராட்டம் நடத்தியிருந்தால் மக்களிடம் கவனம் பெற்றிருக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு எடப்பாடியுடன் நட்பா என்று புகார் குரலை எழுப்பி வருவதாகக் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்