பழங்குடி சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்யக்கோரி முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முதுமலை புலிகள்கள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமை துவங்கி வைப்பதாற்காக அமைச்சர் தீண்டுக்கல் சீனிவாசன் முதுமலைக்கு சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கிய அவர் அங்குள்ள கோவிலுக்கு செல்வதற்காக அருகில் நின்றிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன் காலில் உள்ள செருப்பை கழற்றச் செய்தார். இந்த செய்தி ஊடகங்கள் மூலம் விரைவாக பரவியது, நாடு முழுவதும் பலர் அமைச்சரின் இந்த செய்கைக்காக கண்டனம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுவனும் அமைச்சர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வாறாக எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவனையும், அவரது குடும்பத்தார் மற்றும் கிராமவாசிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் சிறுவனிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். எனினும், பலர் அவரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்று (10.02.2020) சென்னை பட்டினபாக்கத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்யகூறி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் சார்பில் முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.