2021 சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் மே 2ஆம் தேதியான இன்று வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களுக்கான முகவர்கள் ஆகியோர் காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று வாக்கு எண்ணிக்கையைக் கவனித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அமமுக தனியாக கூட்டணி அமைத்து மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டால் அதற்கு அமமுகதான் காரணம் என கூறப்படுவதால், சசிகலா தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் ஆர்வமாக கவனித்து வருகிறார்.