Skip to main content

வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்: சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய பாஜகவினர்! (படங்கள்)

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனை எதிர்த்து பாஜகவினர் வௌிநடப்பு செய்தனர். “மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கையைக் கொண்டு செல்ல வேண்டும்.

 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும்” என்று ஓ. பன்னீர்செல்வம் தொிவித்ததைத் தொடர்ந்து அதிமுகவினரும் வௌிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் பேசும்போது, “வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. வேளாண் சட்டங்கள் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சிகளின் ஆதரவோடு குரல் வாக்கெடுப்பின் மூலம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்