Skip to main content

புதுகோட்டை அரசு மருத்துவர் ராஜினாமா... திமுகவில் 'சீட்' வாங்க முயற்சியா?

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

Pudukkottai government doctor resigns

 

புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரும் அரிமளம் வட்டார மருத்துவ அலுவலருமான டாக்டர் முத்துராஜ் (வயது 42), தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார். திமுக மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர் முத்துராஜ், தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனது அரசுப் பணியை ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அவரது ஆதரவாளர்கள் நம்மிடம் பேசும்போது, "புதுக்கோட்டை நகரத்தில் வசிப்பவர் டாக்டர்.முத்துராஜ். திமுக மருத்துவர் அணியில் மட்டுமல்ல லயன்ஸ் கிளப்பிலும் பணியாற்றி வருகிறார். 'கஜா' புயல் காலத்தில் தொடங்கி, அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன், நலிவுற்றவர்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கிவருகிறார். இதனால், தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உள்ளதால், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 'சீட்' கேட்கும் முயற்சியில் இருக்கிறார். மேலும், திமுக கூட்டணி வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக முழுமையாகக் களப்பணி செய்யத் தயாராக உள்ளார். இன்னும் 17 ஆண்டுகள் அரசுப் பணி செய்யக் காலம் இருக்கையில், களப்பணிக்குத் தனது அரசு மருத்துவர் பணி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு மருத்துவர் பணியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார்" என்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்