Skip to main content

பாமக மாநிலத் துணைத் தலைவர் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்! 

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

Pamaka state vice president fired from party

 

பாமக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ச. வடிவேலனை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்திருப்பதாக பாமக கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. 

 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாமக்கல் மாவட்டம் தாண்டாகவுண்டன்புதூரைச் சேர்ந்த பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் ச.வடிவேலன்  என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (02.11.2021) செவ்வாய்க்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்