Skip to main content
Breaking News
Breaking

பாஜகவிற்கு இவ்வளவு விசுவாசமா?? ஓ.பி.எஸ். செயலைக்கண்டு அதிர்ச்சியான அதிமுக தொண்டர்கள்...

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

நேற்று அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 

o panneerselvam


அவர் பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் பாஜக கொடியை தலைகீழாக கம்பில்கட்டி பிடித்துள்ளார். அதைப்பார்த்த ஓ.பி.எஸ். பாஜக கொடி தலைகீழாக உள்ளது, அதை நேராக கட்டுங்கள் எனக்கூறினார். அதனுடன் நிற்காமல் அவர் கட்டும்வரை பேசாமல் அமைதிகாத்தார். 

இந்த சம்பவம் அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கூட்டணி கட்சியின் கொடி தலைகீழாக உள்ளது என நினைத்து அவர் செய்திருந்தாலும், பாஜகவில் குடும்பத்துடன் இணையப்போகிறார் ஓபிஎஸ். அதிமுக பாஜகவுடன் இணையப்போகிறது. என்ற பேச்செல்லாம் எழுந்துவரும் இந்த நிலையில், அவர் இப்படி செய்தது சர்ச்சையானது. 

 

 

சார்ந்த செய்திகள்