Published on 20/03/2019 | Edited on 20/03/2019

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க பிரதமர் நரேந்திர மோடியே முழு காரணம் என்றும், கடந்த காலங்களில் சீட் கொடுத்ததற்கான நன்றிகூட கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், யார் நல்லது செய்தார்கள் என்பதை எடைபோட்டு பார்ப்பதுதான் இந்த தேர்தல் என்று கூறியுள்ளார்.