Published on 23/05/2019 | Edited on 23/05/2019

வாக்கு எண்ணிக்கை காலை 8மணியில் இருந்து நடந்து வருகிறது.மத்தியில் பாஜக கூட்டணி 330 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று வருகிறது.தமிழகத்தில் 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வட சென்னை,தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்று வருகிறது.அதிமுக,திமுக கட்சிக்கு அடுத்தபடியாக சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தில இருப்பது குறிப்படத்தக்கது.இதன் மூலம் தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.